தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாரத் பயோடெக்கின் கோவிட்-19 தடுப்பூசி அடுத்த மாதம் முதல்கட்ட சோதனை! - பாரத் பயோடெக் நிறுவனம்

ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கிருஷ்ணா எல்லா, கோவிட் 19-க்கான இன்ட்ரான்சல் தடுப்பூசியின் முதல்கட்ட சோதனை அடுத்த மாதம் தொடங்கும் எனத் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணா எல்லா
கிருஷ்ணா எல்லா

By

Published : Dec 9, 2020, 9:28 AM IST

ஹைதராபாத்: பாரத் பயோடெக் நிறுவனம் அடுத்த மாதம் கோவிட் 19-க்கான இன்ட்ரான்சல் (மூக்கு வழியாக செலுத்துதல்) தடுப்பூசியின் முதல்கட்ட சோதனையை தொடங்கவுள்ளதாக அதன் தலைவரும், நிர்வாக இயக்குநருமான கிருஷ்ணா எல்லா நேற்று (டிச. 08) தெரிவித்துள்ளார்.

தற்போது டை குளோபல் உச்சி மாநாட்டின் (டிஜிஎஸ்) அமர்வு நடைபெற்றுவருகிறது. இதில் பேசிய அவர், கரோனா வைரசிற்கான தடுப்பூசியான கோவாக்சின் உள்ளிட்ட தடுப்பூசி உற்பத்திக்கு பாரத் பயோடெக் நிறுவனம் மேலும் இரண்டு வசதிகளை ஏற்படுத்திவருகிறது என்றார்.

இது ஒரு டோஸ் தடுப்பூசியாக இருக்கப்போகிறது என்பதால் இதன் முதல்கட்ட சோதனை அடுத்த மாதம் தொடங்கும் என்று நினைக்கிறேன் எனவும், மருத்துவச் சோதனை செயல்முறையும் வேகமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாரத் பயோடெக், உரிய ஒழுங்குமுறை ஒப்புதலைப் பெற்றதும், இந்தியாவில் மருத்துவப் பரிசோதனைகளில் மேலும் அடுத்தடுத்த கட்டங்களைத் தொடரும் என்றும் கூறியிருந்தார்.

கோவாக்சினின் விலை மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய தடுப்பூசிகள் மிகவும் மலிவாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் 20% இட ஒதுக்கீடு - 8 மாதம் கழித்து ஒப்புதல் அளித்த ஆளுநர்!

ABOUT THE AUTHOR

...view details