ஹைதராபாத்:அதிகளவு உயிரிழப்புகளையும், பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்திவரும் கரோனா வைரசினைக் கட்டுப்படுத்தவும், மேலும் மக்கள் இந்தத் தொற்றால் பாதிக்கப்படாமல் இருக்கவும் உலக நாடுகள் அனைத்தும் கரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் முனைப்பு காட்டிவருகின்றன.
அந்த வகையில் ஹைதராபாத்தை தளமாகக் கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் என்ற கரோனா தடுப்பு மருந்தினைக் கண்டுபிடித்துள்ளது. இந்தத் தடுப்பு மருந்தின் இரண்டு கட்ட சோதனைகள் முடிவடைந்துள்ள நிலையில், அந்தச் சோதனைகளின் முடிவினை ஆய்வுக் கட்டுரையாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில், முதல்கட்ட சோதனையில் கோவாக்சின் செலுத்தப்பட்ட நபரின் உடலில் நீண்ட காலத்திற்குத் தடுப்பாற்றல் செயல்படுகிறது. ஆன்டிபாடிகளும், டி-செல்களும் மூன்று மாதங்கள் வரை நீடித்துள்ளன.