தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"கோவேக்ஸின் மருந்தை மனிதர்களுக்கு செலுத்தும் பரிசோதனை தொடங்கியது" - ஹிரியானா அமைச்சர் - இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பு மருந்து

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பு மருந்தான கோவேக்ஸினை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் செயல் தொடங்கியுள்ளதாக ஹரியானா சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கோவாக்சின்
கோவாக்சின்

By

Published : Jul 17, 2020, 11:44 PM IST

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. வைரஸ் தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில் பல முன்னணி நாடுகளின் விஞ்ஞானிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

அந்த வகையில், கரோனாவுக்கு எதிராக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின் மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் முறை தொடங்கியுள்ளதாக ஹரியானா சுகாதார துறை அமைச்சர் அனில் விஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், "கரோனா தொற்றை தடுக்க கண்டுப்பிடிக்கப்பட்டிருக்கும் கோவேக்ஸின் மருந்து, மனித பரிசோதனை கட்டத்தில் உள்ளது. ரோஹ்தக்கில் உள்ள பிஐஜி மையத்தில் மனிதர்கள் மீது மருந்து செலுத்தி பரிசோதிக்கப்படுகிறது. மூன்று நபர்கள் பரிசோதனைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு செலுத்தப்பட்ட கோவேக்ஸிசின் மருந்தை உடல் ஏற்றுக்கொண்டது. இதுவரை எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details