தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹைதராபாத்தில் கரோனா தடுப்பூசி பரிசோதனை பணிகள் தொடக்கம்!

ஹைதராபாத்: கரோனா தடுப்பூசியான கோவாக்ஸினின் மருத்துவப் பரிசோதனை பணிகள் ஹைதரபாத்தில் உள்ள நிம்ஸ் மருத்துவமனையில் தொடங்கியுள்ளது.

Covaxin
Covaxin

By

Published : Jul 7, 2020, 11:40 AM IST

இந்தியாவில் கரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியை பாரத் பயோடெக் என்ற நிறுவனம் மேற்கொண்டுவருகிறது. இதற்கான பரிசோதனை முயற்சிகள் பல முக்கியக் கட்டங்களைத் தாண்டி தற்போது மனிதர்களிடம் சோதித்துப் பார்க்கும் ’கிளினிக்கல் பரிசோதனை’ என்ற கட்டத்தை அடைந்துள்ளது.

இந்த கிளினிக்கல் பரிசோதனை முயற்சிக்கான தொடக்கப் பணிகள் ஹைதரபாத்தில் உள்ள நிம்ஸ் மருத்துவமனையில் தற்போது நடைபெற்றுவருகிறது. பரிசோதனைக்கு விருப்பமுள்ள நபர்கள் தாமாக முன்வந்து பதிவுசெய்யலாம் என நிம்ஸ் மருத்துவமணை அறிவித்துள்ளது. மேலும், சிலரிடம் பரிசோதனை மாதிரிகளை மருத்துவர்கள் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, தடுப்பூசி பரிசோதனையை விரைந்து முடிக்க வேண்டும் என பாரத் பயோட்டெக் நிறுவனத்திற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் விடுத்த கோரிக்கை சர்ச்சையைக் கிளப்பியது.

இதையும் படிங்க:உலகிலேயே மலிவான விலையில் கரோனா தடுப்பூசியை தயாரிப்பதுதான் நோக்கம்!

ABOUT THE AUTHOR

...view details