தமிழ்நாடு

tamil nadu

கரோனா தடுப்பூசி: அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதி கோரும் பாரத் பயோடெக்!

By

Published : Dec 8, 2020, 6:19 AM IST

டெல்லி: ஃபைசர், சீரம் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து, பாரத் பயோடெக் நிறுவனம் தாங்கள் தயாரித்துள்ள கரோனா தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதி வழங்க கோரி விண்ணப்பித்துள்ளது.

covid-vaccine
covid-vaccine

அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம், ஜெர்மனியின் பயோஎன்டெக் (BioNTech) ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கரோனா தடுப்பு மருந்துக்கு உலகிலேயே முதல் நாடாக பிரிட்டனும், இரண்டாவது நாடாக பஹ்ரைனும் ஒப்புதல் வழங்கியிருந்தன. இந்தியாவில் தடுப்பூசிக்கு அவசர பயன்பாட்டிற்கான அனுமதி வழங்கக்கோரி அந்நிறுவனம் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு விண்ணப்பித்தது.

இதனைத்தொடர்ந்து, ஆக்ஸ்போர்டு நிறுவனம் தயாரித்த கோவிஷீல்ட் என்ற தடுப்பு மருந்தை ஆய்வுக்குட்படுத்திய சீரம் நிறுவனம், அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கக்கோரி மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு விண்ணப்பித்தது.

இந்நிலையில், ஹைதராபாத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் (ஐசிஎம்ஆர்) இணைந்து தயாரித்த கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசர பயன்பாட்டிற்கான அனுமதி வழங்கக்கோரி விண்ணப்பித்துள்ளது. கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம்கட்ட ஆய்வுப் பணிகள், நாடு முழுவதும் 18 இடங்களில் நடைபெற்று வருகிறது. அதில், 22 ஆயிரம் தன்னார்வலர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

மருந்து பயனளிப்பதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் பட்சத்தில் அவசர பயன்பாட்டிற்கான அனுமதி வழங்கப்படும். முழுமையான ஆய்வுப் பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்தே, இறுதி ஒப்புதல் வழங்கப்படும்.

ABOUT THE AUTHOR

...view details