இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கோவிட்-19 தொற்றால் உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி சோதனை மேற்கொள்ள பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது.
கோவிட்-19 தொற்றுக்கான 2ஆம் கட்ட தடுப்பூசி சோதனைக்கு அனுமதி! - Bharat Biotech gets approval
டெல்லி: கோவிட்-19 தொற்று நோய்க்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி சோதனைக்கு பாரத் பயோடெக் நிறுவனம் ஒப்புதல் பெற்றுள்ளது.
phase 2 trials
சோதனைக்கு உட்படுத்துவோரின் பாதுகாப்பு, நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்ட நெறிமுறைகளை கட்டாயம் நிறுவனம் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சோதனை செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்க இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசியின் முதல்கட்ட மனித சோதனையை கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.