டெல்லி: கோவாக்ஸின் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்த பிறகு, நாடு முழுவதும் 25க்கும் மேற்பட்ட இடங்களில் மூன்றாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று பாரத் பயோடெக் இந்தியா தெரிவித்துள்ளது.
கோவாக்ஸின் மூன்றாம் கட்ட பரிசோதனை விரைவில் தொடங்க ஒப்புதல்! - COVAXIN
17:06 October 23
கோவாக்ஸின் மூன்றாம் கட்ட பரிசோதனை விரைவில் தொடங்க ஒப்புதல்!
பாரத் பயோடெக் உருவாக்கிய இந்தியாவின் கோவிட்-19 தடுப்பூசியான கோவாக்ஸினின் மூன்றாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ள, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஆஃப் இந்தியாவின் கீழ் செயல்படும் நிபுணர் குழு நிபந்தனைகளுடன் ஒப்புல் அளித்துள்ளது.
நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க திட்டமிட்டுள்ள மூன்றாம் கட்ட பரிசோதனையில், 18 வயதை கடந்த 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இந்த சோதனை டெல்லி, மும்பை, பாட்னா, லக்னோ உள்ளிட்ட 19 இடங்களில் நடத்தப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், சைடஸ் காடிலா லிமிடெட் உருவாக்கிய மற்றொரு தடுப்பூசியான பாரத் பயோடெக்கின் கோவாக்ஸின் மனித பரிசோதனையில் இரண்டாம் கட்டத்தில் இருப்பது கவனிக்கத்தக்கது.