இந்திய தடுப்பூசி தயாரிப்பாளர் நிறுவனமான பாரத் பயோடெக், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) மற்றும் தேசிய வைராலஜி நிறுவனம் (என்.ஐ.வி) ஆகியவற்றுடன் இணைந்து கோவிட் -19 க்கான இந்தியாவின் முதல் தடுப்பூசி கோவாக்ஸினை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக அறிவித்தது.
தடுப்பூசி வளர்ச்சியின் சவால்கள், கடந்து வந்த பாதைகள், உலகின் மலிவான விலையில் கோவிட் -19 தடுப்பூசியை தயாரிப்பதற்கான அர்ப்பணிப்பு குறித்து பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான டாக்டர் கிருஷ்ணா எல்லா நமது ஈடிவி பாரத்துக்கு பிரத்யேகப் பேட்டியளித்தார்.
பாரத் பயோ டெக்கின் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணா எல்லாவில் பிரத்யேகப் பேட்டி கோவிட்-19க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் போட்டி நிலவுகிறது. உங்கள் நிறுவனம் முதலாவதாக வெற்றிகரமான தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வருமா?
பொதுவாக தடுப்பூசி கண்டுபிடிக்க 14 முதல் 15 வருடங்கள் ஆகும். தற்போது, கோவிட்-19 விஷயத்தில் அது ஒரு வருடமாக குறைந்துள்ளது. இது சாவாலானா விஷயமாக எங்களுக்கு மாறியுள்ளது. உலகிலுள்ள எல்லா தடுப்பூசி நிறுவனங்களுக்கும் இது சவாலான காலம். தயாரிப்பு மற்றும் சீராக்கும் கட்டத்தில் எங்கள் தடுப்பூசி உள்ளது.
குறுகிய காலத்தில் நீங்கள் தடுப்பூசியை கண்டுபிடித்திருக்கிறீர்கள். அது ஒரு சாதனைதான். ஆனால், இது உலகளாவிய ஒத்துழைப்பால் நிகழ்ந்ததா? உலகளவில் உள்ள ஆராய்ச்சித் தரவுகள் உங்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் உதவியதா?
கோவிட்-19ஐ பொறுத்தவரை மூன்று மாதங்களுக்கு முன்பு எவ்வித ஆராய்ச்சித் தரவுகளும் இல்லை. சீனா, அமெரிக்காவிலிருந்து வரும் தரவுகள் பொதுத் தளத்தில் பகிரப்படுகின்றன. அது பாராட்டுக்குரிய விஷயம். ஆனால், உற்பத்தியாளர்கள் தரப்பில் எவ்வித தரவுகளும் பதிவிடப்படவில்லை.
இதுவரை பதிக்கப்பட்ட தரவுகள் அனைத்தும் விலங்குகள், மருத்துவத் தரவுகளாக உள்ளன. தடுப்பூசி உற்பத்தி செய்முறையை யாரும் பொதுவெளியில் பதிவிட மாட்டார்கள். உற்பத்தி செய்முறையானது வணிக ரகசியம்.
சோதனை முறை எப்படித் தொடங்கும், தடுப்பூசி சந்தைக்கு வரும் முன் இருக்கும் நிலைகள் குறித்து கொஞ்சம் விளக்குங்கள்?
புனேவிலுள்ள தேசிய வைரலாஜி நிறுவனம், வைரஸை தனிமைப்படுத்தி வைரஸை வகைப்படுத்தியுள்ளது. அந்த வைரஸை எங்களுக்கு வழங்கியது. அதன் பிறகு மருத்துவ மற்றும் மேம்பாட்டு, நல்ல உற்பத்தி பயிற்சிப் பிரிவுகளை நாங்கள் உருவாக்கினோம். எலி, முயல் போன்ற விலங்குகளில் வைரஸைச் செலுத்தி அதன் நோய் தடுப்பியல், நச்சுயியல் குறித்து கண்காணித்தோம்.
இந்தக்கட்டம் முடிந்தவுடன் மருத்துவ கட்டங்களை நாம் அடைகிறோம். முதல் கட்டத்தில் கோவிட்-19 தொற்று இல்லாத நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு சீராலாஜி ஆய்வு செய்யப் படுகிறது. அவர்களுடைய ரத்த மாதிரிகளையும், வைரஸையும் பிஎஸ்எல்-3 ஆய்வகத்தில் வைத்துப் பார்க்கும்போது வைரஸ் அந்த ரத்தத்தில் பெருகவில்லை. இது ஒரு நீண்ட நிலைகளை கொண்டது.
தடுப்பூசியை பெறுவதில் நீங்கள் எவ்வளவு நெருக்கத்தில் இருக்கிறீர்கள்?
உலகில் ஏராளமான மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளன. ஆனால், தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் குறைவாகவே உள்ளன. நாங்கள் மூன்று தளங்களில் சோதனை செய்துவருகிறோம். இரண்டு தளங்களில் சோதனை வெற்றியடைந்திருக்கிறது. தடுப்பூசி நிச்சயம் இருக்கிறது.
இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கும் ஆய்வகங்களுக்கும் இடையிலான விகிதம் என்ன?
இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் மிகக் குறைவு. தரக் கட்டுப்பாடு, தடுப்பூசி ஆராய்ச்சியில் அவர்களுக்கு நிபுணத்துவம் இல்லை. அமெரிக்காவில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் அதிகமாகவுள்ளன.
இந்தியாவில் தடுப்பூசியை உற்பத்தி செய்யும் நிறுவனங்களே ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களை வைத்திருக்கின்றன. பாரத் பயோ டெக்கும் அதில் ஒன்றே. பாரத் பயோ டெக்கில் 100க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் பணிபுரிகின்றனர்.
பி.எஸ்.எல் -3 என்றால் என்ன? அதுபற்றி விளக்கமாக கூறுங்கள்?
பிஎஸ்எல்(Bio Safety Level) என்பது உயிர் பாதுகாப்பு நிலை. பிஎஸ்எல்-3 உற்பத்தி வசதி கொண்டே ஒரே நிறுவனம் பாரத் பயோ டெக்தான். சீனா பிஎஸ்எல் வசதியை உருவாக்குவதற்காக தற்போது 200 மில்லியன் டாலரை ஒதுக்கியுள்ளது. அமெரிக்காவும் பிஎஸ்எல்-3 வசதியை உருவாக்கும் திட்டத்தில் உள்ளது.
பெரும்பாலானா உற்பத்தியாளர்கள் வெரோ செல் தொழில்நுட்பத்தின் மூலம் உயிரற்ற வைரஸ்களை உருவாக்குகின்றனர். பாரத் பயோ டெக் அந்த தொழில்நுட்பத்திலிருந்து மாறுபட்டு தனித்துவமாக எதுவும் செய்கிறதா?
நாங்கள் அந்த தொழில்நுட்பத்தைத்தான் உபயோகிக்கிறோம். மாறுபட்ட தொழில்நுட்பத்தை நாங்கள் பயன்படுத்தினால் ஒழுங்குமுறைத் தடைகள் எங்களுக்கு ஏற்படும். வெரோ செல் தொழில்நுட்பம் என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. அதில், எங்களுக்கு நிபணத்துவமும் இருக்கிறது.
நீங்கள் தடுப்பூசியை வெற்றிகரமாக கண்டுபிடித்துவிட்டால் உலகளாவியத் தேவை இருக்கும். தடுப்பூசி உற்பத்தியை அளவீடுகிறீர்களா ?
நாங்கள் ஆரம்பக்கட்டத்தில்தான் இருக்கிறோம். வைரஸை எவ்வாறு வளர்ப்பது, வைரஸுக்கு இணையாக தடுப்பாற்றலைப் பெருக்குவது உள்ளிட்ட கட்டத்தில் இருக்கிறோம். ரேபிஸ், ரொட்டா வைரஸ் தடுப்பூசிகளை உலகளவில் அதிகமாக உற்பத்தி செய்யும் நிறுவனம் எங்கள் நிறுவனமாகும். இது எங்களுக்கு உற்பத்தி ஆற்றல் இருப்பதைத்தான் காட்டுகிறது. நாங்கள் அளவீடு வைத்திருக்கிறோம். இந்த வைரஸைப் பொறுத்தவரை அதை உறுதி செய்வதற்கு காலம் எடுக்கும்.
கோவிட்-19ல் பல்வேறு விவகாரகங்கள் உள்ளன. அனைத்து விவகாரங்களும் வெவ்வேறு தடுப்பூசிகளா அல்லது அனைத்துக்கும் ஒரே தடுப்பூசியா?
எல்லா ஆர்.என்.ஏ வைரஸ்களும் விரைவில் மாற்றமடையக்கூடியவை. உயிரற்ற வைரஸ் உயிருள்ள உயிரினத்திற்குள் சென்றால் மட்டுமே பெருகும். அவ்வாறு மனித உடம்புக்குள் புகுந்த வைரஸ் அது பிழைப்பதற்காக பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகும். தற்போது, பார்க்கையில் அந்த மாதிரியானப் பெரிய மாற்றங்கள் இல்லை.
தடுப்பூசி காப்புரிமை வாங்கும் அம்சத்தை பாரத் பயோ டெக் எவ்வாறு பார்க்கிறது?
காப்புரிமை செய்வது மிக முக்கியமான ஒன்றுக்காகத் தான். உனக்கு முன்னால் நான் காப்புரிமை செய்துவிட்டேன் என மற்ற நிறுவனங்கள் வந்து கூறிவிடக்கூடாது. காப்புரிமையை நான் மீறியுள்ளேன் என பன்னாட்டு நிறுவனங்கள் சொல்வதை நான் விரும்பமாட்டேன். அதனால்தான் நாங்கள் உலகளவில் 160 காப்புரிமையை வைத்திருக்கிறோம்.
தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தால் அது பொது மக்கள் எளிதில் பெறும் விலையில் இருக்குமா?
ரொட்டாவைரஸ் தடுப்பூசியை அமெரிக்காவில் 65 டாலருக்கும் ஐரோப்பாவில் 80 டாலருக்கும் விற்பனை செய்தோம். அதே தடுப்பூசியை இந்தியப் பிரதமரிடம் கூறி இந்தியாவில் ஒரு டாலாருக்கு விற்பனை செய்தோம். கோவிட்-19 தடுப்பூசி வரும்போது சீனாவை விட 10 மடங்கு மலிவான விலையில் அதைத் தருவோம்.
நான் கூறியதுபோல, நாங்கள் அரசாங்கத்திடம் இருந்து பணத்தைப் பெறவில்லை. அதற்கான காரணம் நாடு துன்பத்திலிருக்கும்போது அந்த அமைப்பைச் சுரண்ட விரும்பவில்லை. எங்களைப் பொறுத்தவரை எங்களின் தொழில்நுட்பம் மக்களை காப்பாற்றவேண்டும் என்பதே.
இந்த விஷயத்தில் உங்கள் ஊழியர்களின் பங்கு பற்றிக் கூறுங்கள்?
சீனாவும் மற்ற உலக நாடுகளும் இந்த ஆராய்ச்சியில் முன்பே இறங்கிவிட்டன. நாங்கள் நான்கு மாதம் தாமதமாகத்தான் ஆய்வுகளைத் தொடங்கினோம். எப்படி அவர்களின் வேகத்துக்கு ஈடுகொடுப்பது என்ற பதற்றம் எங்களிடம் இருந்தது. பிஎஸ்எல்-3 கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் ஊழியர்கள் வேலை செய்யவேண்டியதிருந்தது. அவர்கள், வைரஸ் இருக்கும் பகுதியில் வேலை செய்ததால் கடந்த இரண்டு மாதங்களாக அவர்களுடைய வீட்டிற்கு கூட செல்லவில்லை. எங்கள் ஊழியர்களுக்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன். எங்கள் ஊழியர்கள் எங்களுக்கும் நாட்டிற்கும் கிடைத்த பரிசு என்றே கருதுகிறேன்.
இந்த குறிப்பிட்ட வைரஸ் இந்த உலகத்திலிருந்து விலகிச் செல்வதை நாம் எப்போது காணலாம்? ஒரு பெரிய அளவிலான மக்களுக்கு தடுப்பூசி போட நேரம் எடுக்குமா?
அடுத்த ஆண்டுக்குள் 1.3 பில்லியன் மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வாய்ப்புள்ளது. அரசு அதற்கான வசதிகளைச் செய்தால் அது நடக்கும்.
இதையும் படிங்க: பிரத்யேகப்பேட்டி: கரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்த பாரத் பயோடெக்!