தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாரத் பந்த் - பல்வேறு மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் பெரும்பாலான மாநிலங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பாரத் பந்த்
பாரத் பந்த்

By

Published : Dec 8, 2020, 10:31 AM IST

புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தை நடத்திவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றுவருகிறது. இதனால், தேசிய தலைநகர் பகுதிக்குள் நுழைபவர்களுக்கும் வெளியே செல்பவர்களுக்கும் பயண மற்றும் போக்குவரத்து வழிகாட்டுதல் வகுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, உத்தரப் பிரதேச, ஹரியானா மாநில எல்லைகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து முடக்கப்பட்டு சாலைகள் மூடப்பட்டுள்ளன. பால் பொருள்கள், பழங்கள், காய்கறிகள் ஆகியவை பற்றாக்குறையில் இருப்பதால் அதன் விற்பனை வெகுவாகப் பாதித்துள்ளது.

காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் முழுவதும் இயல்பு வாழ்க்கை முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய சங்கங்கள் அனைத்தும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் தங்களது தொகுதிகளில் சாலைகளில் அமர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.

மும்பையில் உணவக விடுதிகள், தங்கும் விடுதிகள் மூடப்பட்டுள்ளன. அசாம்பாவிதங்களைத் தவிர்க்கும் நோக்கில் அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் முழு அடைப்பின் தாக்கம் குறைவாகவே உள்ளது.

காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, அகாலி தளம், ஆம் ஆத்மி, திமுக, சிவ சேனா உள்ளிட்ட பல்வேறு மாநில கட்சிகள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

ABOUT THE AUTHOR

...view details