தெலங்கானா மாநிலம் நிசாமாபாத்தில் பாரம்பரிய இஸ்லாம் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஹிபா பாத்திமா. இவர் தற்போது பி.எட் கல்வியல் படிப்பை அங்குள்ள கல்லூரியில் படுத்து வருகிறார். இதில் மற்ற மதங்களைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார். இதனால் இந்து மத புனித நூலான பகவத் கீதையை தேர்ந்தெடுத்து ஆராய்ந்து வருகிறார்.
பகவத் கீதையை மொழிபெயர்த்த இஸ்லாமிய பெண்! - பகவத் கீதை மொழிபெயர்த்த முஸ்லிம் பெண்
ஹைதராபாத்: தெலங்கானாவில் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பகவத் கீதையை அரபி மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.
பகவத் கீதையை மொழிபெயர்த்த முஸ்லிம் பெண்!
இந்நிலையில், தற்போது பகவத் கீதையை அரபி மொழியில் மொழிபெயர்த்து வருகிறார். மேலும், பகவத் கீதைக்கும், குரானுக்கும் உள்ள ஒற்றுமை என்ன என்பது குறித்து புத்தகமும் எழுதி வருகிறார்.
இது குறித்து பேசிய ஹிபா, ‘அனைத்து மதங்களும் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை ஒரே மாதிரியாகத்தான் கூறுகிறது. பகவத் கீதையை படிக்க முழுக்க முழுக்க யுடியூப்பை தான் பயன்படுத்தினேன்’ என்று கூறியுள்ளார்.