#couplechallenge-ஐ புறக்கணிக்க வேண்டும்: தடயவியல் நிபுணர் கருத்து - தடவியல் நிபுணர்
பெங்களூரு: சமூக வலைதளத்தில் பிரபலமாகி வரும் #couplechallenge ஹேஷ் டேக்கில் தம்பதியினர் பதிவிடும் புகைப்படங்களால் ஆபத்து ஏற்படலாம் என தடவியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.
![#couplechallenge-ஐ புறக்கணிக்க வேண்டும்: தடயவியல் நிபுணர் கருத்து புதிய சேலஞ்ச்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-01:02:48:1600932768-8914099-274-8914099-1600898457104.jpg)
கரோனா தொற்று அச்சம் காரணமாக சில தளர்வுகளுடன்கூடிய பொது ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. பொது ஊரடங்கின்போது வீட்டில் இருக்கும் மக்கள் சமூக வலைதளங்களை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்.
சமூக வலைதளங்களிலும் அவ்வப்போது சில சேலஞ்ச்கள் பிரபலமாகின்றன. அந்த வகையில் தற்போது ட்விட்டர், ஃபேஸ்புக்கில் #couplechallenge என்னும் சேலஞ்ச் பிரபலமாகியுள்ளது.
இதில், தம்பதியர்கள் தங்களது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை இந்த ஹேஷ்டேக்கில் பதிவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் பதிவிடும் தரவுகளால் தம்பதியர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என துறைசார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தடயவியல் நிபுணர் பி.என். பணீந்திரா ஈடிவி பாரத்திற்கு கூறுகையில், '#couplechallenge என்ற சேலஞ்சை யார், எதற்காகத் தொடங்கினார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதன் மூலம் பெறப்படும் தரவுகளை வைத்துக்கொண்டு சைபர் க்ரைம் குற்றவாளிகள் பயனாளர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம்.
இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி தம்பதியினர் பதிவுசெய்யும் புகைப்படங்கள், வீடியோக்கள் மூலம் சைபர் க்ரைம் குற்றவாளிகள் அவர்கள் குறித்த முழு விவரங்களையும் இதன் மூலம் பெறப்படும். இதன்பின் அவர்களை எளிதாகவும் ஏமாற்ற முடியும்.