ஆந்திராவில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்களுடன் வீடியோ மூலம் முதலமைச்சர் ஜெகன் மோகன் உரையாற்றினார்.
'ஐந்து ஆண்டுகளில் 1,514 ஆந்திர விவசாயிகள் தற்கொலை' - ஜெகன் மோகன் - Jagan Mohan Reddy
அமராவதி: "ஆந்திராவில் 2014-19 ஆண்டு காலத்தில் 1,514 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இவர்களில் 391 குடும்பங்களுக்கு மட்டுமேதான் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது" என்று, முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
அதில், "மாவட்ட குற்றம் ஆவணங்கள் பீரோக்களின் படி 2014-19 ஆண்டுக்காலத்தில் 1,513 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஆனால் வெறும் 391 குடும்பங்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கிப்பட்டுள்ளன. இறந்தவர்கள் தொடர்பான ஆவணங்களை சரிபார்த்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஏழு லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும். லஞ்சம் கொடுப்பதைத் தடுக்க இதனை நுண்ணறிவு பிரிவினர் கண்காணிக்க வேண்டும்" ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், "இதுதொடர்பாக நாம் சட்டம் ஏற்றவேண்டும். தவறானவர்கள் கையில் இழப்பீடு தொகை சென்றடையகூடாது " என்றும் கூறினார்.