பாஜகவின் நாடாளுமன்றக் குழு கூட்டம் நாடாளுமன்ற நூலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மோடி, "அந்தந்த தொகுதிகளின் தண்ணீர் பிரச்னையை தீர்க்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் உழைக்க வேண்டும். அரசு அலுவலர்களிடம் அமர்ந்து மக்களின் குறைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டறிய வேண்டும், என்றார்.
'சமூக சேவையில் ஈடுபடுங்கள்' - பிரதமர் மோடி அறிவுரை - அரசியல்
டெல்லி: அரசியலில் மட்டும் கவனம் செலுத்தாமல் சமூக சேவையிலும் ஈடுபடுங்கள் என, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
modi
மேலும், அரசியலில் மட்டும் கவனம் செலுத்தாமல் சமூக சேவையிலும் கவனம் செலுத்த வேண்டும் எனவும், நாடாளுமன்ற கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும்" என்றார்.
இந்த கூட்டத்தில் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.