தமிழ்நாட்டில் சிறந்த நிறுவனமாக அம்பத்தூர் தொழிற்பேட்டையில் செயல்படும் தனியார் நிறுவனத்தை இந்திய பொறியாளர் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தேர்வுசெய்து கௌரவித்துள்ளது.
இந்தியாவில் தலைசிறந்த ஏற்றுமதி நிறுவனங்கள் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்பட்டு, இந்திய பொறியாளர் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சார்பாக விருது வழங்கி கௌரப்படுத்திவருகிறது.
அந்த வகையில் 42ஆம் ஆண்டுக்கான விருதளிப்பு விழா தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார்.
சிறந்த நிறுவனமாக அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனம் தேர்வு தமி்ழ்நாட்டில் சிறந்த நிறுவனமாக, சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ஹெச்.பி.வால்வ்ஸ் அன்டு ஃபிட்டிங்ஸ் இந்தியா நிறுவனம் தேர்வு செய்யப்பட்டடது. இதற்கான பாராட்டுப் பத்திரம், கோப்பையை தமிழிசை சௌந்தரராஜனிடமிருந்து, அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ். ஹரிச்சந்திரன் பெற்றுக்கொண்டார்.
இதையும் படிங்க...பொய்க் குற்றச்சாட்டைச் சுமத்துவதாக ஐபிஎஸ் மனைவி மீது புகார்