பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ளது போரிங் மற்றும் லேடி கர்சன் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம். தலைநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த நிறுவனம் கடந்த 2018-19ஆம் கல்வி ஆண்டில் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆராய்ச்சி நிறுவனத்திற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தின் குவாலியரில் பிறந்த வாஜ்பாய், இந்தியாவின் பிரதமராக இருந்தார்.