நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன. கரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் சீல் வைக்கப்பட்டு, அரசுக் கட்டுப்பாட்டில் உள்ளன.
பெங்களூருவில் 3 ஆயிரத்தைத் தாண்டிய கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகள்!
பெங்களூரு: கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்பதைத் தொடர்ந்து, கட்டுப்பாட்டுப் பகுதிகள் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளன.
இதுதொடர்பாக பேசிய சுகாதாரத்துறை அலுவலர், "கடந்த 10 நாள்களில் மட்டும் பெங்களூருவில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு, கரோனா தொற்று அதிகம் பாதித்த 3 ஆயிரத்து 276 இடங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதுவரை ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோருக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.