தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெங்களூரு கலவரம்: காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் கைது - காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் கைது

பெங்களூரு கலவரம் தொடர்பாக காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் உள்பட 60க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு கலவரம்
பெங்களூரு கலவரம்

By

Published : Aug 14, 2020, 4:39 PM IST

கர்நாடகா காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் அகந்த ஸ்ரீநிவாஸ் மூர்த்தியின் உறவினர், தனது பேஸ்புக் பக்கத்தில் இஸ்லாம் மதத்திற்கு எதிராக அவதூறு கருத்துகளை பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அதனை கண்டிக்கும் வகையில் பெங்களூருவில் ஆகஸ்ட் 11ஆம் தேதி போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலவரம் வெடித்ததைத் தொடர்ந்து, மூவர் கொல்லப்பட்டனர்.

காவல்துறையினர் மீது போராட்டக்காரர்கள்தாக்குதல் நடத்தியதில், 60க்கும் மேற்பட்ட காவலர்கள் படுகாயம் அடைந்தனர். கலவரத்திற்கு தொடர்புடையதாகக் கூறி காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் உள்பட 60க்கும் மேற்பட்டோர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, வன்முறைக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி 140க்கும் மேற்பட்டோரை கர்நாடக காவல்துறையினர் கைது செய்தனர்.

பெங்களூரு கலவரம்

கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி இரவு நடைபெற்ற கலவரம் தொடர்பாக, ஏழு முதல் தகவல் அறிக்கைகள்பதிவு செய்யப்பட்டுள்ளன. கலவரத்தில் தொடர்புடைய 16 பேர், சமூக ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. பிஃஎப்ஐ என்ற இஸ்லாமிய அமைப்பின் அரசியல் கட்சியே சமூக ஜனநாயக கட்சி ஆகும்.

பெங்களூரு கலவரம்

கலவரத்திற்கு தனக்கும் சம்பந்தம் இல்லை என சமூக ஜனநாயக கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. கலவரம், சட்ட விரோத செயல்கள், கொலை முயற்சி என பல்வேறு பிரிவுகளின் கீழ் டிஜே ஹல்லி, கேஜே ஹல்லி காவல்நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கலவரத்திற்கும்சமூக ஜனநாயக கட்சி உறுப்பினர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கர்நாடகா உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு : வெற்றி யாருக்கு?

ABOUT THE AUTHOR

...view details