தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'என் குடும்பத்துல இருக்குற மத்தவங்களுக்கு பரவக் கூடாது'; விருந்தினர் மாளிகையில் கரோனா பாதிக்கப்பட்ட மகனை மறைத்து வைத்த தாய்! - COVID-19

டெல்லி: கரோனா பாதித்த மகனை யாருக்கும் தெரியாமல் விருந்தினர் மாளிகையில் மறைத்து வைத்த ரயில்வே ஊழியரை இடைநீக்கம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கரோனா
கரோனா

By

Published : Mar 20, 2020, 4:39 PM IST

பெங்களூரு ரயில்வே ஊழியர் ஒருவர், ஜெர்மனியிலிருந்து ஸ்பெயின் வழியாக வந்த தன் மகனை ரயில்வே துறைக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் மறைத்து வைத்துள்ளார். அவரை கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பரிசோதித்த மருத்துவக் குழுவினர், வீட்டில் தனிமையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அவரின் தாயார் பெங்களூரு ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள விருந்தினர் மாளிகையில் மறைத்து வைத்துள்ளார்.

இந்நிலையில், இவருக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அதன் பின்னர், அவரை தேடிக் கண்டுபிடித்த மருத்துவக் குழுவினர், தற்போது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே ஊழியர் விஜயா கூறுகையில், "தன் மகனிடமிருந்து குடும்பத்தினருக்கு கரோனா பரவக் கூடாது என்ற அச்சத்தில், அவரின் தாய் அரசின் விருந்தினர் மாளிகையில் மறைத்து வைத்து பலரின் உயிர்களோடு விளையாடியுள்ளனர். இதைக் கண்டிக்கும் விதமாக அவரைப் பணி இடைநீக்கம் செய்கிறோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'இந்தியாவில் கரோனா பரவல் 2ஆம் கட்டத்தில் உள்ளது' - ஹர்ஷ் வர்தன்

ABOUT THE AUTHOR

...view details