நாடு முழுவதும் கரோனா வைரசின் (தீநுண்மி) தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.
இந்நிலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்கள் அதிக அளவில் இந்தத் தீநுண்மியால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இதனைக் கருத்தில்கொண்டு பெங்களூருவில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் புகார் அளிக்க, காவல் நிலையத்திற்கு வெளியே கியோஸ்க் என்றசிறப்புப் புகார் இயந்திரம் அமைக்கப்படும் என்று மாநகராட்சி காவல் ஆணையர் பாஸ்கர் ராவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அனைத்து காவல் உயர் அலுவலர்களுடன் தொலைபேசி மூலம் பேசிய காவல் ஆணையர், "காவல் நிலையத்திற்கு வரும் நபர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்யப்படுவதோடு, முகக் கவசம், தகுந்த இடைவெளி ஆகியவற்றை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.