பெங்களுரூ - மைசூரு இடையிலான ரயில்தடத்தில் அதிவேக பயணத்தின்போது பாதை சீராக இருக்க வேண்டும் என்பதற்காக 130 கிமீ பாதையில் 40 கோடி ரூபாய் செலவில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், ரயில்பாதை சோதனை ஓட்டம் நடைப்பெற்றது. அந்தச் சோதனை ஓட்டத்தின்போது, ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் ஊற்றி பார்த்துள்ளனர்.
அந்த 130கிமீ ரயில் பயணத்திலும் ஒரு துளி தண்ணீர் கூட கீழே சிந்தவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், '' அதிவேகமான இந்த ரயில் பயணம் மிகவும் சீராக இருந்தது. இந்த ரயில் பாதையில் செய்யப்பட்ட சிறந்த பராமரிப்பு பணிகளால் இது நிகழ்ந்துள்ளது'' என ட்வீட் செய்துள்ளார்.
இதையும் படிங்க:திருவனந்தபுரம் விமான நிலையம் : 'மத்திய அரசுக்கு கேரளா ஒத்துழைப்பு வழங்காது' - முதலமைச்சர் தடாலடி!