உலகை உலுக்கும் கரோனா வைரஸினால் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வசிக்கும் நபர் ஒருவர் சமூக ஊடகத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் தனது புகைப்படத்துடன், "கைகளைச் சேர்ப்போம், வெளியில் சென்று பொது இடத்தில் வாய் திறந்து தும்பலாம்" என பதிவிட்டார்.
கரோனாவை பரப்புங்கள் என சமூக வலைதளத்தில் பதிவிட்டவர் கைது - இந்தியாவில் கரோனா
பெங்களூரு: பொது இடங்களில் தும்பி கரோனா வைரஸை பரப்புவோம் என சமூக வலைதளத்தில் பதிவிட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
bengaluru-man
அதுமட்டுமல்லாமல், "வைரஸ் பரவுகிறது என்ற வார்த்தையை உலகத்தை முடிவுக்கு கொண்டுவர பரப்பு" என்றும் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவு வைரலாகவே, அதையறிந்த அப்பகுதி காவல்துறையினர் அந்த நபரை கைது செய்தனர். இதற்கிடையில், கரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 724 ஆக உயர்ந்தது.
இதையும் படிங்க:2 மாதத்தில் 15 லட்சம் பயணிகள் வருகை; கண்காணிப்பில் ஓட்டை - மத்திய அமைச்சரவை செயலாளர்