கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த அஞ்சனி என்பவரது மனைவி கீதாவை அடையாளம் தெரியாத கும்பல் தாக்கியதில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவந்தனர்.
சொத்துக்காக மனைவி கொலை: கணவர் உள்பட 6 பேர் கைது! - பெங்களூரு கொலை சம்பவங்கள்
பெங்களூரு: கர்நாடகாவில் சொத்துக்காக மனைவியை கொலை செய்த கணவர், மகன் உள்ளிட்ட 6 பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
Wife killed by her husband for assert
இந்நிலையில், கீதாவின் கணவர் அஞ்சனிடம் நடத்திய விசாரணையில், அவரது மகனுடன் இணைந்து அடியாட்கள் வைத்து கீதாவை கொலைசெய்தது தெரியவந்தது. சொத்து விவகாரம் காரணமாக அடிக்கடி கணவர், மனைவியிடையே தகராறு ஏற்பட்டுவந்த நிலையில் தற்போது மனைவியை கொலை செய்தது அம்பலமானது.
இதையடுத்து, கீதாவை கொலைசெய்த அஞ்சன், மகன் வருண், அடியாட்கள் நவீன், நாகராஜ், பிரதீப், நாகா ஆகியோரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.