சொத்துக்குவிப்பு வழக்கின் காரணமாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் நான்காண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் சசிகலா கடந்த ஜனவரி 27ஆம் தேதி அன்று சிறையிலிருந்து விடுதலை ஆனார்.
இந்நிலையில் இளவரசியின் தண்டனை காலம் நிறைவு பெற்றதும் பிப்ரவரி 5ஆம் தேதி விடுதலை ஆனார்.
சொகுசு விடுதிக்கு சென்ற இளவரசி அதன்படி, அவர் இன்று காலை 11 மணிக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலையானார். இவர் நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையான 10 கோடி ரூபாயை, ஏற்கனவே செலுத்தியிருந்தார்.
சிறையிலிருந்து விடுதலையான இளவரசி, சசிகலா தங்கியுள்ள சொகுசு விடுதிக்கு விரைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.