பெங்களூரு:கல்லூரிக்கு கட்டணம் செலுத்தவந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்க வேறு மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சேர்ந்துள்ளார். நிலுவையில் உள்ள கட்டணத்தைச் செலுத்த அவர் பெங்களூரு வந்துள்ளார்.
இதையடுத்து தனது நண்பர் ஒருவரை உதவிக்காக அழைத்துள்ளார். அங்கு வந்த அந்நபர் விஜயநகர் பகுதியில் உள்ள தனது அறைக்கு அழைத்துச் சென்று அந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து கொன்றுள்ளார்.