தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இரும்புத் தகரம் கொண்டு இரு அடுக்கு மாடிகளை அடைத்த மாநகராட்சி ஊழியர்கள் - குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு! - இரும்பு தகரம் கொண்டு இரு அடுக்கு மாடிகளை அடைத்த மாநகராட்சி ஊழியர்கள்

பெங்களூரு: டொமலூருக்கு அருகில் உள்ள குடியிருப்பில் இரு அடுக்கு மாடிப் பகுதிகளில் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த இரு கட்டடங்களை தகரம் கொண்டு மாநகராட்சி ஊழியர்கள் அடைத்தனர்.

கரோனா உறுதி: இரும்பு தகரம் கொண்டு இரு அடுக்கு மாடிகளை மாநகராட்சி ஊழியர்கள்!
கரோனா உறுதி: இரும்பு தகரம் கொண்டு இரு அடுக்கு மாடிகளை மாநகராட்சி ஊழியர்கள்!

By

Published : Jul 24, 2020, 5:22 PM IST

கர்நாடக மாநிலம், பெங்களூரு டொமலூருக்கு அருகிலுள்ள குடியிருப்பு ஒன்றில் உள்ள இரு அடுக்கு மாடிகளில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பெங்களூரு மாநகராட்சி ஊழியர்கள், அந்த குடியிருப்பில் உள்ள இரு அடுக்கு மாடிகளை மட்டும் இரும்புத் தகரத்தால் அடைத்துள்ளனர்.

இதனையடுத்து இது குறித்து அந்த குடியிருப்பில் உள்ள சதீஷ் சங்கமேஸ்வரன் என்பவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், 'எங்கள் குடியிருப்பில் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் தனது இரு சிறிய குழந்தைகளுடன் வசிக்கும் தாய், வயதான தம்பதியர் பெரிதும் பாதிக்கப்படுவர். இதில் தீ விபத்து ஏற்பட்டால் எப்படி கட்டுப்படுத்த முடியும்? கரோனா கட்டுப்படுத்துதலின் அவசியத்தை மாநகராட்சி ஆணையர் புரிந்து கொள்ள வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

பெங்களூரு மாநகராட்சி ஆணையர் மஞ்சுநாத பிரசாத்

இதனையடுத்து இதனைப் பார்த்த பெங்களூரு மாநகராட்சி ஆணையர் மஞ்சுநாத பிரசாத், ஊழியர்களின் இந்தச் செயலுக்கு மன்னிப்பு கேட்கிறேன். அந்த தகரங்களை அகற்ற அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். அனைவரையும் பாதுகாப்பாக கட்டுப்படுத்தல் செய்தலில் நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க....பாட்டீல் தலைமையில் கீழ குஜராத் பாஜக புதிய உயரத்தை எட்டும்: மோடி

ABOUT THE AUTHOR

...view details