தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

2020ஆம் ஆண்டுக்கான சிறந்த விமான நிலைய விருது வென்ற பெங்களூரு! - விமான நிலையம்

பெங்களூரு: இந்தியா மற்றும் மத்திய ஆசியாவின் சிறந்த பிராந்திய விமான நிலையத்திற்கான விருதினை பெங்களூரு கெம்பகவுடா விமான நிலையம் மூன்றாவது முறையாக வென்றுள்ளது.

bengaluru-airport-voted-as-best-regional-airport-in-india-and-central-asia
bengaluru-airport-voted-as-best-regional-airport-in-india-and-central-asia

By

Published : May 11, 2020, 5:04 PM IST

சர்வதேச விமான நிலைய விருதுகள் விமான போக்குவரத்து மற்றும் சேவைகளில் மிகமுக்கிய விருதாக கருதப்படுகிறது. ஆறு மாதங்களில் 100க்கும் மேற்பட்ட தேசிய விமான நிலைய வாடிக்கையாளர்களால் நிறைவு செய்யப்படும் வினாத்தாள்களை அடிப்படையாகக் கொண்டு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

இதற்கான அளவுகோள்களாக விமான நிலையங்களில் வாடிக்கையாளர் சேவை மற்றும் வசதிகள் அடிப்படையாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா மற்றும் மத்திய ஆசியாவில் சிறந்த பிராந்திய விமான நிலையம் என்ற விருதினை பெங்களூருவின் கெம்பகவுடா விமான நிலையம் கைப்பற்றியுள்ளது.

இதுகுறித்து பெங்களூரு விமான நிலைய சீஈஓ ஹரி கே மரார் பேசுகையில், ''இந்த விமான நிலையம் தொடங்கப்பட்டு 11 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக இந்த விருது கைப்பற்றியதை பெருமையாக நினைக்கிறோம். இந்த விருது நாங்கள் பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த சிறந்த சேவையை அளித்து வருவதை உறுதிசெய்துள்ளது.

கரோனா சூழலில் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வரும் எங்களுக்கு, இந்த விருது புதிய உத்வேகம் அளிக்கும் விதமாக உள்ளது. பெங்களூரு விமான நிலைய ஊழியர்கள் அனைவருக்கும் இது ஊக்கமளித்துள்ளது'' என்றார்.

இதையும் படிங்க:வந்தே பாரத்: அமெரிக்காவிலிருந்து தாயகம் அழைத்துவரப்பட்ட இந்தியர்கள்

ABOUT THE AUTHOR

...view details