கர்நாடக மாநிலம், பெங்களூரு லேடிகுர்ஷான் சாலையில் உள்ளது ஐஎம்ஏ நகைக்கடை. இந்தக் நகைக்கடையில், சிறப்புப் புலனாய்வு அலுவலர்கள் நேற்று காலை 10 மணியில் இருந்து இரவு 9 மணி வரை சோதனை நடத்தினர்.
பிரபல நகைக் கடையில் ரூ.20 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம் பறிமுதல்! - பிரபல நகை கடை
பெங்களூரு: ஐ.எம்.ஏ. நகைக் கடையில் சிறப்புப் புலனாய்வு அலுவலர்கள் நடத்திய சோதனையில் ரூ. 20 கோடி மதிப்புள்ள தங்கம், வைர நகைகளை பறிமுதல் செய்தனர்.
பிரபல நகை கடையில் சோதனை
இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரூ. 8.5 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம், ரூ. 9.5 கோடி மதிப்புள்ள வைரம், ரூ. 2 கோடி மதிப்புள்ள 450 கிலோ வெள்ளி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.