தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'கரோனாவை அழிக்க வேண்டும்' - விழிப்புணர்வு ஏற்படுத்தும் பெங்களூரு தானோஸ்!

இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், உலகை அழிக்க நினைக்கும் 'இன்ஃபினிட்டி வார்' வில்லன் தானோஸை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ள சம்பவம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

bengalurean-thanos-wants-you-to-erase-all-viruses-not-just-half
bengalurean-thanos-wants-you-to-erase-all-viruses-not-just-half

By

Published : Jul 27, 2020, 4:47 PM IST

மார்வெல் தயாரிப்பில் சென்ற ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார் இறுதி பாகம் உலகம் முழுவதும் உள்ள மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றது. அதில் வரும் வில்லன் தானோஸ் கதாபாத்திரம் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உலகத்தை அழிக்க வேண்டும் என்ற தானோஸ் கதாபாத்திரத்தின் ஆசையை சூப்பர் ஹீரோக்கள் எப்படி தடுக்கிறார்கள் என்பதே படத்தின் கதை.

தானோஸ் கதாபாத்திரம் போல் தற்போது கரோனா வைரஸ் பரவல் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதனைத் தடுக்க தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதும், சுகாதாரமாக இருப்பதும் மட்டுமே கரோனாவிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள உதவும் என அரசால் பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விழிப்புணர்வு ஏற்படுத்தும் பெங்களூரு தானோஸ்

இந்தப் பரப்புரையை தானோஸ் கதாபாத்திரம் மூலம் பெங்களுரூவில் ஓவியர் பாடல் நஞ்சுந்தசாமி ஏற்படுத்தியுள்ளார். தானோஸ் கதாபாத்திரம் கைகளில் சோப்புடன் தன் கைகளைக் கழுவது போல் சுவரில் ஓவியம் வரையப்பட்டுள்ளது.

தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்கும் டைட்டானிக் ஜோடி

உலகை அழிக்க வேண்டும் என சுற்றித்திரிந்த தானோஸை, கரோனாவை ஒழிக்க வேண்டும் என பயன்படுத்தியது பெங்களுரூ மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதனோடு சேர்த்து மற்றொரு ஓவியமும் வரையப்பட்டுள்ளது. தானோஸ் கதாபாத்திரம் மக்கள் சுகாதாரமாக இருக்க வலியுறுத்தினால், உலகமே பார்த்து வியந்த காதல் கதாபாத்திரங்களான ஜாக் - ரோஸ் காதல் ஜோடியை வைத்து தனி மனித இடைவெளியை முன்னிறுத்திள்ளனர்.

டைட்டானிக் படத்தில் வரும் முக்கியக் காட்சியில் ஜாக் - ரோஸ் கதாபாத்திரம் இருவரும் கப்பலின் முன்நின்று கைகளை நீட்டி ரொமான்ஸ் செய்யும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கும். இதனை தனி மனித இடைவெளியை மக்கள் கடைபிடிப்பதற்காக அந்த இரண்டு கதாபாத்திரங்களும் தனி மனித இடைவெளியை கடைபிடித்து கைகளை நீட்டி ரொமான்ஸ் செய்வது போல் வரையப்பட்டுள்ளது.

இந்த ஓவியம் நியூ ஏஜ் ரொமான்ஸ் ஸ்டோரி (New Age Romance Story) என சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய இந்த சுவர் ஓவியங்கள் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

மக்களிடையே பிரபலமாகும் ஓவியங்கள்

இதையும் படிங்க:அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்திற்கு அவதார் மூலம் ரிவீட் அடிப்பேன் - ஜேம்ஸ் கேமரூன்

ABOUT THE AUTHOR

...view details