மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா நகரில் உள்ள கரியா பகுதியில் உள்ள சுடுகாட்டில் கடந்த வாரம் கொல்கத்தா மாநகராட்சி வேனில் கொண்டு வரப்பட்ட அழுகிய நிலையில் இருந்த 14 பிரேத உடல்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த உடல்கள் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் அப்பகுதியினர் அந்த உடல்களை தகனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கொல்கத்தாவில் நடந்த இந்தச் சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி, விமர்சனத்திற்கு உள்ளாகியது.