தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மனைவியை எங்கேயோ மறைச்சுவச்சுட்டாங்க - மாமியார் வீட்டின் முன்பு கணவர் தர்ணா! - மாமியார் வீட்டில் கணவர் தர்னா போராட்டம்

கொல்கத்தா: தாயார் வீட்டிற்குச் சென்ற மனைவியை காணவில்லை என, மாமியார் வீட்டின் முன்பு கணவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ro
ro

By

Published : Sep 29, 2020, 12:41 AM IST

மேற்குவங்க மாநிலம் நதியா மாவட்டத்தைச் சேர்ந்த அலோக் மல்லிக், தான் காதலித்துவந்த சங்கீதா கோஷுக்கு 18 வயது எட்டியவுடன் கோயிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார். அவர்களின் திருமணத்தை சட்டப்படியும் பதிவு செய்துள்ளனர். ஆனால், காதல் திருமணத்திற்கு சங்கீதா வீட்டில் எதிர்ப்புத் தெரிவித்தாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு சங்கீதா தனது தாயாரைப் பார்ப்பதற்காக சோனகாலி கிராமத்திற்குச் சென்றுள்ளார். ஆனால், அதன் பிறகு சங்கீதா மல்லிக்கை தொடர்புகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. வீட்டிற்கு வந்த சங்கீதாவை வேறு எங்கையோ அவரது குடும்பத்தினர் மறைத்துவைத்திருந்ததாக கருதிய மல்லிக், மாமியார் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மனைவி வரும்வரை நான் இங்கிருந்து புறப்பட மாட்டேன் என மல்லிக் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டு போராட்டத்தை தொடர்ந்தார்.

ABOUT THE AUTHOR

...view details