தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காதல் அழிவதில்லை - மேற்கு வங்கத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்! - cancer patient

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் இறக்கும் தருவாயில் காதலன்  காதலியைத் திருமணம் செய்துகொண்ட நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

மரணிக்கும் தருவாயில் திருமணம்

By

Published : Aug 7, 2019, 1:14 PM IST

காதல் - இந்த வார்த்தை மட்டும் இல்லாவிட்டால் உலகம் என்றோ அழிந்திருக்கும். காதலிப்பவர்கள் அழியலாம், அழிக்கப்படலாம். ஆனால் காதலும் அன்பும் என்றும் அழிந்ததாகச் சரித்திரமில்லை. அன்பும் காதலும்தான் உலகத்தைத் தொடர்ந்து இயக்கிவருகிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில் மேற்கு வங்கத்தில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் பிதி தாஸ். இவரை அரிய வகை எலும்பு புற்றுநோய் தாக்கியதன் காரணமாக, கீமோதெரபி சிகிச்சை பெற்றுவந்தார். துரதிர்ஷ்டவசமாக அவரால் புற்றுநோயை எதிர்த்து போராட முடியவில்லை. இதனால் அவரது உடல்நிலை படிப்படியாக மோசமடைந்து வந்தது. உயிரிழக்கும் தருவாயில் அவரிடம் கடைசி ஆசைகள் குறித்து கேட்கப்பட்டது. அப்போது பிதி அவரது காதலர் சுப்ரதா குண்டுவை பார்த்து தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டார். இதைக்கேட்டதும் நொடியும் தாமதிக்காத சுப்ரதா, திருமணத்திற்கு சாட்சியாக பிதியின் நெற்றியில் குங்குமத்தையிட்டார்.

அன்றும் இன்றும் என்றும் ஒன்றாக!

திருமணம் நடந்து இரண்டே மணி நேரத்தில், சுப்ரதாவின் கரங்களைப் பற்றியபடி பிதி தாஸ் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details