தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ஒவ்வொரு குடிபெயர்ந்த தொழிலாளருக்கும் ரூ.10,000 கொடுங்கள்' - மம்தா பானர்ஜி - மம்தா பானர்ஜி புலம்பெயர் தொழிலாளர்கள் 10 ஆயிரம் ரூபாய்

கொல்கத்தா: ஒவ்வொரு குடிபெயர்ந்த தொழிலாளருக்கும் 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குமாறு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

bengal CM
bengal CM

By

Published : Jun 3, 2020, 3:22 PM IST

Updated : Jun 3, 2020, 4:39 PM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "அமைப்புசாரா தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் உள்பட அனைத்து குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்குமாறு மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

பிஎம் கேர்ஸ் (பிரதமரின் அவசரகால உதவி மற்றும் நிவாரண நிதியம்) மூலம் திரட்டப்பட்ட நிதியின் ஒரு பகுதியை இதற்காகச் செலவிட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள பொது ஊடரங்கு காரணமாக, குடிபெயர்ந்த தொழிலாளர்கள் வேலையில்லாமலும், தங்களது சொந்த ஊருக்குப் போக முடியாமலும் தவித்து வருகின்றனர். இந்தப் பின்னணியிலேயே மம்தா பானர்ஜி இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க : இந்தியாவின் பெயரை மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

Last Updated : Jun 3, 2020, 4:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details