மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் பிச்சை எடுக்கும் நபர் ஒருவர் குழந்தையை கடத்தியதாக சந்தேகித்து அவரை பொதுமக்கள் கற்களால் தாக்கியுள்ளனர். விவரம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு அழைத்துச் சென்றனர்.
குழந்தை கடத்தியவர் என்று சந்தேகித்து கொலை! - சந்தேகித்து
கொல்கத்தா: ஜல்பைகுரியில் பிச்சை எடுக்கும் நபர் ஒருவர் குழந்தையை கடத்தியுள்ளார் என்று சந்தேகித்து பொதுமக்கள் அவரை கல்லால் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கொலை
மருத்துவமனையில் அனுமதித்த போது, அவர் உயிரிழந்திருப்பதாக மருத்துவர் கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார், அவரை காப்பாற்ற எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. அவர் குழந்தையை கடத்தியுள்ளார் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஆனால் குழந்தைகள் ஏதும் கடத்தப்படவில்லை, அது தொடர்பாக எந்த புகார்களும் பதியவில்லை என்று தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.