ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் டோன் நகரில் உள்ள மசூதி வளாகத்தின் வெளியே யாசகம் செய்பவரிடம் இரண்டரை லட்ச ரூபாய் பணமும் 12 சட்டைகள் இருப்பதையும் அப்பகுதி மக்கள் கண்டறிந்து உரிய அலுவலர்களிடம் தெரிவித்தனர்
யாசகம் பெறுபவரிடம் 77 ஆயிரம் ரூபாய் பழைய நோட்டுகள்! - officers part 77000 old currency notes at Andhra beggar
அமராவதி: மசூதி வெளியே யாசகம் பெறுபவரிடம் (பிச்சைக்காரர்) 77 ஆயிரம் செல்லாத நோட்டுகள் உட்பட இரண்டு லட்சம் ரூபாய் பணம் இருந்ததால் குழப்பம் நிலவியது.
![யாசகம் பெறுபவரிடம் 77 ஆயிரம் ரூபாய் பழைய நோட்டுகள்! money](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12:18-7438677-69-7438677-1591041778620.jpg)
money
தகவலறிந்து இடத்திற்கு விரைந்த அலுவலர்கள் நடத்திய விசாரணையில், அவரின் பெயர் ஸ்ரீனு என்றும், தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.
இவரிடமிருந்த இரண்டு லட்சம் ரூபாய் பணத்தில் 77 ஆயிரம் செல்லாத பழைய நோட்டுகளும் ஆகும். இவர் குறித்த கூடுதல் தகவல்களை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.