கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், "ரஃபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுதொடர்பாக சி.ஏ.ஜி அறிக்கையையும் தாக்கல் செய்துள்ளது. எனினும், இதுகுறித்து நீங்கள் (ராகுல் காந்தி) பேசி கொண்டு வருகிறீர்கள். பிரதமர் அல்லது பாதுகாப்பு அமைச்சரை கேள்வி கேட்பதற்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் குறித்து முதலில் நீங்கள் பேச வேண்டும் " என்றார்.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் குறித்து காங். முதலில் பேச வேண்டும் - நிர்மலா சீதாராமன்! - agustawestland deal
கொல்கத்தா: ரஃபேல் குறித்து பேசுவதற்கு முன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நடைபெற்ற அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் குறித்து பேச வேண்டும் என ராகுல் காந்தியை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கி பேசியுள்ளார்.
நிர்மலா சீதாராமன்
தொடர்ந்து பேசிய அவர், "ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவின்போது மேற்கு வங்கத்தில் பத்திரிகையாளர் மீது திருணாமுல் காங்கிரஸ் தாக்குதல் நடத்தியது. ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பும் மம்தா, தற்போது வன்முறையில் ஈடுபட்டுள்ளார் " என தெரிவித்தார்.