தெலங்கானாவில் மதுபானக் கடைகள் மட்டும் திறக்கப்பட்டு மது விற்பனை நடைபெறுகிறது. ஆனால், பார் இரண்டு மாதமாக அடைக்கப்பட்டிருப்பதால் மதுபானங்கள் காலாவதி தேதி முடிவடைந்து வீணாகும் நிலைமை உள்ளதாக அரசுக்கு பார் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்பாக தெலங்கானா கலால் துறை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மார்ச் 14 முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து பார்களும், கிளப்புகளும் மூடப்பட்டுள்ளன. பீர் பாட்டில்கள் காலாவதி தேதியுடன் வருவதால், பல்வேறு பார்கள், கிளப் நிர்வாகத்தினர் பீர் வீணாகி இழப்பு ஏற்படும் சூழல் உள்ளது.
பீர் அப்புறப்படுத்த அனுமதிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தனர். இதைக் கருத்தில் கொண்டு மே 14 ,15 ஆகிய தேதிகளில் மாநிலத்தின் அனைத்து பார்கள், கிளப்புகளில் பீரின் தேதி சரிபார்ப்பு பணியை அலுவலர்கள் மேற்கொள்வார்கள். அதில், மே 17 முதல் மே 31 வரை தேதிக்கு முன்னதாக வீணாகும் பீர்களை மட்டும் மதுபானக் கடைகளுக்கு மாற்றப்படும். இந்த பணியானது மே 16ஆம் தேதி காலைக்குள் முடித்து விடவேண்டும்" என அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க:எல்ஜி பாலிமர்ஸ் அபாயம்: நச்சு வாயுவை சுவாசித்த மக்கள் சாலைகளில் சரிந்து விழும் காட்சிகளின் பதிவு!