தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சந்தைக்குப் போனவர்களை சண்டைக்கு இழுத்த குளவி! - உப்பளம் பகுதி

புதுச்சேரி: உழவர் சந்தையில் காய்கறி வாங்க சென்றவர்களை குளவி கொட்டியதில், காயமடைந்த பத்துக்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

குளவி கொட்டியதில் காயமடைந்தவர்கள்
குளவி கொட்டியதில் காயமடைந்தவர்கள்

By

Published : Apr 29, 2020, 8:32 PM IST

புதுச்சேரி உப்பளம் பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகின்றது. இங்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் தங்களுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.

இந்நிலையில் உழவர் சந்தைக்குக் காய்கறி வாங்க, வந்த பொதுமக்களை குளவிகள் தாக்கியதில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சிகிச்சைப் பெற்று வருபவர்களை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகளை செய்யுமாறும் மருத்துவ அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

குளவி கொட்டியதில் காயமடைந்தவர்கள்

இதையும் பார்க்க: மருத்துவமனைக்கு முகக்கவசம் அணியாமல் சென்ற அமெரிக்க துணை அதிபர்!

ABOUT THE AUTHOR

...view details