தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட 'பீட் தி ரீட்ரீட்' விழா

புதுதில்லி: குடியரசுத் தின விழா கொண்டாட்டத்தின் இறுதி விழாவான ‘பீட் தி ரீட்ரிட்’ நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

'பீட்டிங் தி ரீ-ட்ரீட்' விழா
'பீட்டிங் தி ரீ-ட்ரீட்' விழா

By

Published : Jan 30, 2020, 10:33 AM IST

தொடர்ந்து நான்கு நாள்கள் நடைபெற்ற குடியரசு தின கொண்டாட்டங்களின் இறுதி விழாவான ’பீட்டிங் தி ரீ ட்ரீட்’ (Beating the Retreat) விழா டெல்லியிலுள்ள விஜய் சவுக்கில் கொண்டாடப்பட்டது.

'பீட் தி ரீ-ட்ரீட்' என்பது பழமையான ராணுவ பாரம்பரியத்தைக் குறிக்கிறது. அதாவது போர்ப்படை வீரர்கள் சண்டையை நிறுத்திவிட்டு, ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பாசறைகளுக்குத் திரும்பிச் செல்வதைக் குறிக்கிறது.

'பீட்டிங் தி ரீ-ட்ரீட்' விழா

1950களின் முற்பகுதியில் இந்திய ராணுவத்தின் மேஜர் ராபர்ட்ஸ் என்பவரால் மக்களின் மத்தியில் தனித்துவமாகக் காட்சிப்படுத்துவதற்காக 'பீட் தி ரீ ட்ரீட்' விழா உருவாக்கப்பட்டது.

இந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், முப்படைகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: சீனாவினை கொடுமைப்படுத்தும் கொரோனா 170ஆக உயிரிழப்பு அதிகரிப்பு!

ABOUT THE AUTHOR

...view details