ஒடிசாவின் பூரி நகரில் நேற்று ரிக்ஷா இழுப்பவருக்கும் அங்கு பிச்சை எடுத்துக்கொண்டிருந்தவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடக்கத்தில் வெறும் வாக்குவாதமாகத் தொடங்கிய இந்தச் சண்டை, பின் கை கலப்பாக மாறியது. பிச்சைக்காரர் அடித்த அடியில் ரிக்ஷா இழுப்பவரின் தலை பிளந்து ரத்தம் கொட்டியுள்ளது.
சண்டையிட்டுக் கொண்டிருந்த இருவரையும், அங்கிருந்த போக்குவரத்துக் காவலர்களும் பொது மக்களும் பிடித்து அருகிலிருந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில், பிச்சைக்காரர் ஆங்கிலத்தில் புகார் கடிதத்தை நிரப்ப, அருகிலிருந்தவர்கள் வியந்துள்ளனர்.