தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஐபிஎல் தொடரில் 10 அணிகள்? பிசிசிஐ கூட்டத்தில் இறுதி முடிவு - ஐக்கிய அரபு அமீரகம்

மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் ஐபிஎல் தொடரில் கூடுதல் அணிகளை சேர்ப்பது குறித்தும், அந்த அணிக்கான டெண்டர் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

ஐபிஎல்-யில் 10 அணிகளா? பிசிசிஐ கூட்டத்தில் இறுதி முடிவு?
ஐபிஎல்-யில் 10 அணிகளா? பிசிசிஐ கூட்டத்தில் இறுதி முடிவு?

By

Published : Nov 14, 2020, 4:27 PM IST

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தனது வருடாந்திர பொதுக் கூட்டத்தை (ஏஜிஎம்) டிசம்பர் மாதம் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கான தேதி குறித்த முடிவு தீபாவளிக்கு பின்னர் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அது குறித்து ஊடக அறிக்கையின்படி, ஐபிஎல் தொடரில் மேலும் இரண்டு அணிகளை சேர்ப்பது குறித்து பிசிசிஐ தீவிரமாக பரிசீலித்து வருவதாக தெரிகிறது. ஐபிஎல் தொடரில் தற்போது எட்டு அணிகள் இடம்பெற்றுள்ளன.

பிசிசிஐயின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் இந்த நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்தால், அடுத்தாண்டு தொடக்கத்தில் ஒரு மெகா முழு அளவிலான ஏலம் ஏற்பாடு செய்யப்படும், இதனால் அனைத்து உரிமையாளர்களும் தங்களது அணிக்கு புதிய வீரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு சம வாய்ப்புகளைப் பெறுவார்கள்.

இதற்கிடையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமான ஐபிஎல் தொடர் நடந்து முடிந்த பின், பிசிசிஐ தப்போது உள்நாட்டு போட்டிகளுக்கான திட்டங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details