தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட மருத்துவர்! - ஹர்ஸ் வர்தன்

டெல்லி: எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜூனியர் மருத்துவராக பணிபுரிந்த ஒருவர் மன அழுத்தத்தின் காரணமாக விடுதியின் பத்தாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

AIIMS doctor dies of suicide  AIIMS Delhi junior doctor jumps off 10th floor  AIIMS doctor  depression  COVID-19  doctor commits suicide  எய்ம்ஸ் மருத்துவர் தற்கொலை  டெல்லி எய்மஸ் மருத்துவர் தற்கொலை  சுகாதாரத் துறை அமைச்சர்  ஹர்ஸ் வர்தன்  டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் தற்கொலை
மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்ட மருத்துவர்

By

Published : Jul 11, 2020, 11:20 AM IST

டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் மனநல மருத்துவம் பயிலும் மாணவரும் மருத்துவருமான அனுராக் குமார் நேற்று (ஜூலை 10) மாலை அவர் தங்கியிருந்த விடுதியின் பத்தாவது மாடியிலிருந்து கீழே குதித்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆறு மாதத்திற்கும் மேலாக அவர், மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. விடுப்பு வழங்காததும், பணிச்சுமை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தினாலும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அனுராக்கின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக, தற்கொலை செய்துகொண்ட மருத்துவர் அனுராக் குமார் அவரது துயரங்களையும் அழுத்தங்களையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். ஜூன் 21ஆம் தேதி வெளியிட்ட வலைபதிவில் அவர் எதிர்கொண்ட அழுத்தம் குறித்து விரிவாக எழுதியுள்ளார்.

இவ்வலைப்பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஸ் வர்தன், இதைப் படிக்கும் போது எனக்கு கண்ணீர் வந்தது. தன்னைத்தானே மாய்த்துக்கொள்ளும் நிலை நிறுத்தப்படவேண்டும். அனுராக் குமாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:நோபல் பரிசு வழங்கக்கோரி பாலத்தின் மேல் ஏறி பெண் அடாவடி...!

ABOUT THE AUTHOR

...view details