அழிந்து வரும் உயிரினமான பழந்தின்னி வௌவால்களை பாதுகாக்கும் நோக்கத்தோடு அதனைப் பிடிப்பதற்கும், வைத்திருப்பதற்கும் அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில் சிலர் பழந்தின்னி வௌவால்களை பிடித்து செல்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல்கிடைத்தது.
காரைக்காலில் பழந்தின்னி வௌவால் வைத்திருந்தவர்கள் கைது - வனத்துறையினர்
நாகை: காரைக்காலில் இருபதுக்கும் மேற்பட்ட பழந்தின்னி வௌவால்களை மதுபானக் கடைகளில் விற்பனை செய்ய கொண்டு சென்ற இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்
bats nagapattinam
அதன்படி விழுதியூர் சோதனைச்சாவடியில் வனத்துறையினர் சோதனையில் ஈடுபட்டபோது சுடப்பட்டு இறந்த நிலையில் இருபதுக்கும் மேற்பட்ட பழந்தின்னி வௌவால்களை கொண்டு சென்ற இரண்டு நபர்களை கைது செய்தனர்.
இதுகுறித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் காரைக்கால் மற்றும் அதனைச்சுற்றியுள்ள மதுபானக்கடைகளில் விற்பனை செய்ய பழந்தின்னி வௌவால்களை கொண்டு சென்றதாக தெரிவித்தனர்