தமிழ்நாடு

tamil nadu

ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை நனைவாக்கும் ரியல் ஹீரோ..!

By

Published : Jun 29, 2019, 9:29 AM IST

ராஜஸ்தான்: பார்மர் மாவட்டத்தில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக மருத்துவப் படிப்பு சொல்லித்தரும் மருத்துவரின் செயல் பலரையும் வியக்க வைத்துள்ளது.

ராஜஸ்தான்

உலக நாடுகளுக்கு சவால் விடும் அளவிற்கு அதிக இளைஞர்களைக் கொண்ட நாடாக விளங்கும் இந்தியா, வல்லரசாகிவிடும் என்ற சிந்தனை ஒவ்வொருவரின் கனவாகவும் இருந்து வருகிறது. இன்றைய இளைஞர்கள் நாட்டின் எதிர்கால தூண்கள் என்றே கூறலாம். ஆனால், நகரத்தில் வசிக்கும் மாணவர்களை விட கிராமப் பகுதிகளில் வசிக்கும் கல்வியில் தங்களை உயர்த்திக்கொள்ள அதிக சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. முதலில் பணம் தடையாக இருந்தது, தற்போது நீட் தேர்வு இருக்கிறது.

இதனை உடைத்தெறிய மாணவர்களின் கனவு நாயகனாக பரத் சரண் என்ற ஒருவர் உருவாகியுள்ளார். அவர் ஏழை மாணவர்களின் ரியல் ஹீரோவாக வாழ்ந்து வருவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் மருத்துவராக பணியாற்றி வரும் இவர், கடந்த ஏழு வருடங்களாக வருடத்திற்கு 50 ஏழை மாணவர்களுக்கு இலவசமாக மருத்துவம் கற்றுக்கொடுத்து வருகிறார். அந்த 50 மாணவர்களும் அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களாவர்.

ராஜஸ்தான்

கிராமம், கிராமமாக சென்று 50 கிராமத்தில் வசிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பாடம் நடத்தி வருகிறார். இவரிடம் இலவசமாக பாடம் கற்க வரும் மாணவர்களில் 25 பேர் 11,12ஆவது படிக்கும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மருத்துவர் பரத் சரணின் இந்த செயலை சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைவரும் புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.

இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோன்று பல மருத்துவர்கள் ஏழை மாணவர்களைத் தேடிச் சென்றால் பல மருத்துவர்கள் உருவாகுவார்கள் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details