லடாக்கின் கிழக்கில் அமைந்துள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15-16ஆம் தேதி நள்ளிரவில் சீன ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இது நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கம் காரணமான நாட்டின் பல்வேறு பகுதிகளில் சீனப் பொருள்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சுதேஷ் வர்மா, ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “இந்தியா- சீனா நாடுகளுக்கு இடையேயான பதற்றம், எல்லைப் பிரச்னை, சீனப் பொருள்களுக்கு தடை விதிக்கப்படுமா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இந்திய வணிகர்கள் பாதிப்பு
இது குறித்து சுதேஷ் வர்மா கூறுகையில், “சீனாவுடனான வர்த்தகம் இந்திய உற்பத்தியாளர்கள் பலரை காயப்படுத்துகிறது என்று சிலர் வாதிடலாம். இது உண்மையல்ல. இந்திய உற்பத்தியாளர்களுக்கும் வணிகங்களுக்கும் அரசு உதவும் என்பதுதான் உண்மை.
சீனாவிலிருந்து அனைத்தும் முழுமையான பொருள்களாக வணிகர்கள் இறக்குமதி செய்வதில்லை. மூலப்பொருள்களும் இறக்குமதி செய்து, நம் நாட்டில் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களும் உள்ளனர். பொதுவாக, வர்த்தகம் நமது பொருளாதாரத்தின் ஒரு பகுதியாகும். அந்தவகையில், உலகளவில் இரண்டாவது பெரிய மின்னணு கடிகாரங்கள் உள்ளிட்ட பொருள்கள் உற்பத்தியாளராக இந்தியா சமீபத்தில் உருவெடுத்தது.
லடாக் பிரச்னை
இந்தியர்கள் சீனப் பொருள்களை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளனர். இதே முனைப்புடன், இந்திய உற்பத்தியாளர்கள் தங்களின் வணிகம், சேவையை உலகின் மூலை முடுக்கெங்கிலும் விரிவுப்படுத்த வேண்டும்.
இந்தியா ஆக்கிரமிப்பு நாடு அல்ல. சீனாவின் வன்முறையால் எங்கள் மக்கள் மத்தியில் கிளர்ச்சியை காண்கிறோம். நாங்கள் நிச்சயம் இரு நாடுகளுக்கு இடையே எல்லைக்கோட்டை அமைப்போம். கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் வன்முறை 1962ஆம் ஆண்டுகளிலே தொடங்கிவிட்டது.
டிக்- டாக் தடை?
பயனர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை கவலைகள் தொடர்பாக உளவுத்துறை புலனாய்வு அமைப்பு 52 சீன மற்றும் அதனுடன் தொடர்பில் உள்ள செல்போன் செயலிகளுக்கு சிவப்பு கொடி காட்டியுள்ளது.