காந்தியின் 150ஆவது பிறந்தநாள் வரும் அக்டோபர் இரண்டாம் தேதி கொண்டாடப்படவுள்ளது. காந்தியின் கனவான தூய்மை இந்தியாவை உருவாக்க மத்திய அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஸ்வச் பாரத் என்ற பெயரில் தூய்மை இந்தியா திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு கழிவு மேலாண்மையை வலியுறுத்தியும், திறந்தவெளி கழிப்பிடமற்ற இந்தியாவை உருவாக்கவும் தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், பிளாஸ்டிக் கழிவுகளுக்கு எதிராக புதிய நடவடிக்கை ஒன்றை எடுக்க அரசு பரிசீலித்துவருவதாக பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருந்தார். ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை வரும் அக்டோபர் இரண்டாம் தேதியுடன் தடை செய்யப்படலாம் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.