10 பொதுத்துறை வங்கிகளை இணைப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் விளக்கம் கொடுத்திருந்தார்.
வங்கிகள் இணைப்புக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்! - வங்கி ஊழியர்கள்
டெல்லி: பொதுத்துறை வங்கிகளை இணைப்பதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று போராட்டம் நடத்த உள்ளனர்.
வங்கி ஊழியர்கள்
அதன்படி, நான்கு பெரும் வங்கிகளுடன் ஆறு சிறிய வங்கிகள் இணைக்கப்படுகிறது. இதன்மூலம், நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12ஆக குறைக்கப்படுகிறது.
இந்நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்த இந்திய வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் இன்று போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளும் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வரும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.