இந்திய ரிசர்வ் வங்கி அளித்துள்ள சமீபத்தியத் தகவலின்படி இந்த நிதி ஆண்டில் முதன்முறையாக வங்கிக் கடன் வளர்ச்சி விகிதம் செப்டம்பர் 13 முதல் 27ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரண்டு வார காலத்தில் 8.79 சதவிகிதமாக ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்துள்ளது.
செப்டம்பர் 13ஆம் தேதிக்கு முந்தைய இரண்டு வார கால முடிவில், வங்கிக் கடன் வளர்ச்சி விகிதம் 10.26 சதவிகிதம் உயர்ந்து 97.01 லட்சம் ரூபாய்க்கு உயர்ந்தது. வைப்புநிதி வளர்ச்சி விகிதம் சென்ற நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது 9.38 சதவிகிதத்திற்குக் குறைந்திருந்தாலும், கடந்த இரண்டு வார காலகட்டத்திற்குள் 10.02 சதவிகிதத்திற்கு உயர்ந்துள்ளது.
மேலும் ஆகஸ்ட் 2019 வரையிலான தரவுகளின் அடிப்படையில் விவசாயம், அது சார்ந்தக் கடன்கள் சென்ற வருடத்துடன் ஒப்பிடும்போது, 6.6 சதவிகிதத்திலிருந்து 6.8 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. சேவைத்துறைக்கான கடன் வளர்ச்சி விகிதம் 26.7 சதவிகிதத்திலிருந்து 13.3 சதவிகிதத்திற்குக் குறைந்துள்ளது. தனி நபர் கடன் வளர்ச்சி விகிதம் 18.2 சதவிகிதத்திலிருந்து 15.6 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.