வங்கதேச நாட்டில் இருந்து 900 டன் சாம்பலுடன், ‘மா மமோடமோய்’ (Ma Mamotamoi) என்ற விசைப்படகு கொல்கத்தா அருகே நேற்று வந்துகொண்டிருந்தது. தனியார் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டிருந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த வர்த்தகம் நடைபெற்றுள்ளது.
13 ஊழியர்களுடன் வந்துகொண்டிருந்த இந்தப் படகானது, கொல்கத்தா துறைமுகம் அருகே வந்தடைந்தபோது, தவறான திசையில் சென்று துறைமுகத்துக்குச் சொந்தமான கப்பலுடன் மோதி விபத்து ஏற்பட்டது.