வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, 4 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ஷேக் ஹசீனா, தலைநகர் டெல்லியில் உலக பொருளாதார மன்றம் ஏற்பாட்டில் நடக்கவுள்ள பொருளாதார கருத்தரங்கத்தில் கலந்துகொள்கிறார்.
இதையடுத்து வருகிற 5ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்து பேசுகிறார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து பேசப்படவுள்ளது.