தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பொருளாதாரத்தில் இந்தியாவைத் தாண்டிச் சென்ற வங்கதேசம் - காங். தலைவர் வேதனை - அசாம் காங்கிரஸ் தலைவர் தருண் கோகாய்

இந்தியாவைவிட வங்கதேசம் பொருளாதார வளர்ச்சியில் முன்னேறியுள்ளது என அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் தலைவர் தருண் கோகாய் கவலை தெரிவித்துள்ளார்.

Congress
காங்கிரஸ்

By

Published : Feb 8, 2021, 12:25 PM IST

அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தருண் கோகாய் பாஜக, பிரதமர் நரேந்திர மோடி மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அஸ்ஸாம் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் தொடங்கிவைக்க பிரதமர் நரேந்திர மோடி அஸ்ஸாம் வருகைதந்திருந்தார்.

பிரதமரின் வருகை குறித்தும், பாஜகவின் செயல்பாடுகள் குறித்தும் தருண் கோகாய் பேசுகையில், "அஸ்ஸாம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு முந்தைய காங்கிரஸ் கட்சியின் 15 ஆண்டுகால ஆட்சியே முக்கியக் காரணம். ஆனால், பாஜக ஆட்சியில் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்தித்து மோசமான நிலையை எட்டியுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசம் தற்போது பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவைத் தாண்டி வேகமாக முன்னேறிவருகிறது. இது மிகவும் வேதனை தரும் விஷயம். பிரதமர் மோடியின் அரசு அனைத்துத் தரப்பிலும் தோல்வியைக் கண்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ஆப்கானுக்கு 5 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் அனுப்பிவைத்த இந்தியா

ABOUT THE AUTHOR

...view details